Panguni Uthiram - A divine day for the worship of Lord Subramanya

A devotee contributed article.

பங்குனி .உத்திரத் திருநாள் !  தெய்வத் திருமணத்  திருநாள்!

 

ஸ்ரீ மஹா கணபதி கோவில், அரிசோனாவில் ஏப்ரில் 3 ம் தேதியன்று  நடக்கவிருக்கும் 

பங்குனி உத்திரத்  திருவிழாவின் கலந்து கொள்ள பக்த கோடிகளே! வாரீர்!

 

 பெருமையைக் காணீர்!!  

 

 பங்குனி மாத உத்திர நஷத்திர பௌர்ணமியில்தான் எம்பெருமான் சிவ பெருமான்.

உலக நாயகி பார்வதி தேவியை மணந்து உமா-மகேஸ்வரராய் திருமணக்கோலக் 

காட்சி தந்ததும் இன்றே!  

 

 "வள்ளிக் கணவன் பேரை, வழிப்போக்கன் சொன்னாலும் 

  உள்ளம் உருகுதடி, கிளியே! ஊனும் உருகுதடி" என்று பாடினான் ஒரு பக்தன் ! 

 

  அந்த வள்ளிக் கண்வன் தேவயானையை  திருபரங்க்குன்றத்தில் இன்று மணந்த 

 திரு நன்னாள்தான், பங்குனி உத்திரம்  !

 

இத் திரு விழாவில் கலந்து கொண்டு , அழகன் முருகனின் திருமணக் கோலத்தை

 கண்டு களித்து,அவன்  அருள் பெற பக்த கோடிகளே!  குடும்பத்துடன்  வாரீர் !

பால் மணக்கும், தேன் மணக்கும், காவடிகள் ஆடும் திருச்செந்தூரில்,
திருமணக் கோலத்துடன்  திரு அருள் புரியும், திரு  முருகன் திருவடிகளை ,

 இங்கும் கொண்டாடுவோம் !

 

மேலும் , அன்புட ன் தொடுத்த ஆண்டாளின் மாலையை ஏற்று அணிந்த ,அரங்கநாதன் 

அவளையே திருமணம் புரிந்து கொண்ட திரு நன்நாளும் இன்று தான்!

 

பார்க் கடலில் உதித்த மகாலஷ்மி,  விஷ்ணு பரந்தாமனை மணந்ததும் இன்றே ! 

 

வால்மீகி ராமாயணத்தில் தேவி சிதா பிராட்டி ஸ்ரீ ராமனை இன்று மணந்ததாக கூறுகிறது.

.

 "சுவாமியே, சரணம் ஐயப்பா!" என்று பக்த கோடிகள், விரதமிருக்கும்
சபரி மாமலை அப்பன் தர்ம சாஸ்தா பிறந்த பங்குனி உத்திர திரு நன்னாளும்  இன்rறே !

பாலும், தெளி தேனும் கலந்தால்ப் போல், இவ்விரண்டு சுவைகளையும்

 ஒருங்கே சுவைத்து அனுபவிக்க வாரீர்!

 

பக்த கோடிகளே! அவன்  அருள் பெற குடும்பத்துடன்  வாரீர் !

 

                                தொகுத்தவர்  - ஹரிஹர சுப்பையா