Prana Pratishtapana Kumbhabhishekam musings by Sri Harihara Subbaiah

ஓம்: ஸ்ரீ குருப்யோ நம:

ஸ்ரீ தங்கம் பட்டர் துவக்கிவைத்த கும்பாபிஷேகம் மிக சிறப்பாகவே முடிந்தது ! 

 

தெய்வத்தின் திருமணம் ! - "ஸ்ரீ சீதா  கல்யாணம்"   -  வைபோகமே !

 

" நல்லவர் ஒருவர் உளரேல், பெய்  எனப் பெய்யும் மழை " என்பது வாக்கு !

இதை நிரூபிக்க, (சங்கீத மூவரில் ஒருவரான), ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதர் 

மழையே இல்லாது வரண்டுபோன ஒரு ஊருக்கு  சென்றபொழுது, அவ்வூர்

 அரசன் அவரை ,அன்புடன் வரவேற்று , மழையே இல்லாததினால் ஏற்ப்பட்ட  

துன்ப நிலையை விவரிக்க, சக்தி உபாசகரான ஸ்ரீ தீக்ஷதர் அவர், முழு

 மனதுடன் அம்பிகையை அமிர்தவர்ஷி ராகத்தில் வேண்ட, மழை கொட்டியது நாம் அறிவோம் !

 

அதுபோலவே, ஆதித்யன் ஆட்சி புரியும் அரிசோனா,  ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் 

மே 8,9.10 ஆகிய 3 தினங்களில் நடந்த "ஸ்ரீ ராமர் பரிவார கும்பாபிஷேக " வைபவதில் 

 பார்க் கடலில் துயிலும் பரந்தாமன், ஸ்ரீ ராமர் அவதாரமாக, தன் பரிவாரத்துடன்,

இங்கு கருணை மழை பொழிந்த காக்ஷி ஒரு கண் கொள்ளக் காக்ஷி ! காணக் கண் 

கோடி வேண்டும்! அவர் மகிமையை ஆயிரம் நாவு கொண்ட ஆதிசேஷனாலும் சொல்ல இயலாது!

 

இக்கருணை மழை பொழிய காரணமாக இருந்த,  இரண்டு அதி  ஸ்ரீ ராம பக்த பட்டர்கள் -

1.  அட்லாண்டா ஹிந்து கோவிலிருந்து  வந்த ஸ்ரீ கோபால பட்டர் வெகு பக்தி சிரத்தையுடன்

ஸ்ரீ சீதா கல்யாணம் செய்வித்த  மகிமையை என்ன என்று சொல்ல?

 

2. வர்ஜினியாவிலிருந்து. "சொல் செல்வன்" ஸ்ரீ  வேங்கடாசார்ய பட்டர், ஒவ்வொரு கட்டத்திலும்,

 பள்ளி ஆசான் போல,, செய்யும் காரியத்தைப்பற்றி விபரமாகச் சொல்லி, நமக்கு தெரிய

 வைத்த மகிமையை சொல்லவா? 

 

 அல்லது, இவர்களுடன், கல்லாயிருந்த சிலைகளுக்கு, உயிர் ஊட்டி ,மேலும் சக்தி ஏற்ற ,

 வேதங்கள் நன்கு கற்ற , வைதீக சிகாமணிகள் " வள்ளியூர் வல்லவன்"

 பண்டிட் ஸ்ரீ  ஸ்ரீஜெயந்தீச்வரன் பட்டர் , மற்றும் அதுபோலவே, ஆந்திர மகா நாட்டின் பிரபல 

வேதிக்  பண்டிட் ஸ்ரீ அணில் சர்மா.  இவர்கள் நம் கண் முன்னேயே காண வைத்த எல்லா

பண்டிதர்களின் வித்வத்தையும், அனுபவத்தின் மகிமையை  பற்றி  சொல்லவா !

 

ஜெய் ! பஜரங்பலீக்கு ஜெய்! என்ற கரகோஷம் மத்தியில் , ஸ்ரீ ராமர்  சன்னதிக்கு முன் நின்று,

 ஸ்ரீ  ராம - சீ தா  தரிசனமே கண்டு களிக்கும் ஸ்ரீ ஆஞ்சனேயர் ஸ்தாபன விழா மஹிமையை சொல்லவா? 

ஸ்ரீ ஆஞ்சனேயர் நமக்கு கிடைத்த இரண்டாவது  பெரும் புதையல்! நம் பாக்கியம்!

 

முதல் புதையல் பாக்கியம்! 

"குடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்குமாம்:" என்பது போல,இந்த

கோவில்லுக்கே உயிரான  சிலையை - ஒரு பெரும் புதையலை- தானம் கொடுத்தருளிய

பரம சிவ பக்தன், கொடை வள்ளல்,  ஸ்ரீ. சிவாய சுப்பிரமுனிசுவாமிகளின் கருணை

நிறைந்த உள்ளத்தின் மகிமையைப் பற்றிச்  சொல்லவா !!

 

 எங்கும் மங்கையர் குதூகலமாக, லோக மாதா ஸ்ரீ சீதா  பிராட்டியாரை சுற்றி கொண்டாடி

 கல்யாண மணத்தை  மேலும் சிறப்பிக்கவைத்த அந்த மங்கையர் திலகங்களின்

மஹிமையைச் சொல்லவா?

 

கொட்டிய கருணை மழையில் சொட்டச் சொட்ட நனைத்த ரமேஷ் நடராசன் - ஜயஸ்ரீ  தம்பதிகள்

என்ன தவம் செய்தார்களோ ! ஸ்ரீ நடராசன் இல்லத்திலும், உள்ளத்திலும் நடமாடும் தெய்வமான 

 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகாப் பெரியவர்  பொழிந்த கருணையும் ஆசியையும் பற்றி சொல்லவா?

 

மேலும், திட்டமிட்டு கோவில் பல அடுக்குகளில் முன்னேற, ஆர்வத்துடனும்,

நேர்மையுடனும் ,நிவாகத் திறமையுடனும் , மிக அடக்கத்துடனும் செயல்படும் நிறை குடம் -

 ஸ்ரீ மௌலி சுப்பிரமணியன் மீதும், ஸ்ரீ காஞ்சி மகான் கருணை மழை பொழிந்ததை சொல்லவா? 

 

ஒவொரு கோவில் நிகழ்ச்சி நடக்கும் பொழுதும், மிக்க ஊக்கத்துடன் முக்கியமான

கட்டங்களை  போட்டோ எடுத்து, உடனேயே ஆலய  "பேஸ் புக்கில்" போட்டு, நிகழ்ச்சிகளின் 

 சிறப்பை எடுத்துக்காட்டும் ஸ்ரீ க்ருத்திவாஸ் - காயத்ரி  தம்பதிகளின் மகிமையைச் சொல்லவா?

இந்த  கைங்கர்யத்திற்க்கு  ஆண்டவன் அவர்களுக்கு என்றும் அருள் புரிவார் !

 

"Behind every successful man, there is a woman" is a saying! Similarly, "Behind every public function ,

there are Volunteers!" தொண்டர்கள்!  தொண்டர்கள்! தொண்டர்கள்!  காற்று, மழை, அரிசோனா சூடு

என்று கூட பார்க்காது, சுய நலம் கருதாது, தன் குடும்பத்தைபற்றியும் கவலைப் படாது ,  

கோவிலுகென்றே உழைக்கும் தொண்டர்களுக்கு எம்பெருமானின் அருள்  என்றும்  உண்டு!

 

              "தொண்டர்களே! உங்கள், சேவை, எங்களுக்கு தேவை"

 

 பக்த ககோடிகளே ! 

ஐயா !உங்கள் எல்லோருக்கும் எம் தலை சாய்ந்த  வணக்கம்! மி க்க நன்றி,,,,

உங்கள் சேவையின் மகிமையை சொல்ல இயலாது ! அன்று, இது சிறு கோவில் இருந்தது!

இன்று அதுவே ஒரு மாளிகை!  காரணம்?-உங்கள் உதவியினால்! அல்லும் பகலும் 

இடைவிடாத உழைத்த  உங்கள் உழைப்பினால்! இந்த தெய்வ கைங்கர்யங்கள் செய்வதனால்,

உங்கள் குடும்பம் எழு தலை முறைக்கு செழிப்பாக இருக்கும்!

 

உண்மையான பக்தர்களைப்பற்றி பெரியோர்கள் கூறுவர்!

 நாம் எல்லோரும் ஆண்டனிடம் " இது வேண்டும், அது வேண்டும்" என்று கேட்கிறோம்!ஆனால்,

ஆண்டவனோ உண்மை பக்தர்களிடம் சென்று, " உமக்கு என்ன வேண்டும்?" என்று கேட்கிராராம்  !

அதுதான் உண்மையான பக்தர்களின் மகிமை!

 

பக்த கோடிகளே ! இது வரை, பாதி கிணறு தான் தாண்டியிருக்கிறோம்! மிகுதி, "ராஜா கோபுரம்"

மாட வீதிகள் என்று பல தெய்வ கைங்கர்யங்கள்  செய்ய இருக்கின்றன !  அதை முடித்துக்

கொடுப்பது யார்? அதுவும்  உங்கள் உழைப்பின் மகிமை  என்று சொல்லவும் வேண்டுமோ?

 

இயற்றியவர் - ஹரிஹர சுப்பையா