Signficance of Rama Navami - A Devotee Perspective

            அரிசோனா ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் நடக்கவிருக்கும் 

                                       ஸ்ரீ ராம நவமி உத்ஸவ வைபவம்,    

                         காத்திருந்த கண்களுக்கு ஒரு கண்கொள்ளக் காட்சி !

                        இன்னல்களைப் போக்க்கி, - சகல சௌபாக்கியங்களை அளிக்கும், 

                                       ராம நாம ஜபம் செய்வோம், வாரீர் !            

நிகழும் March 28, 2015, சனிக்கிழமையன்று அரிசோனா ஸ்ரீ  மகாகணபதி ஆலயத்த்தில் நடக்கவிருக்கும 
ஸ்ரீ ராம நவமி கொண்டாட்த்தில் பங்கு கொள்ள  தவறாதீர்கள்! 

 இம்மையே "ராம' என்ற இரண்டெழுத்தினால்'' -  என்கிறார் கம்பர்
" 2  அக்க்ஷர  த்வாயம் வேதம்  -  "பரம் கீர்த்தனம் கலி நாஷனம்"
 "ராமா " என்ற இரு அக்ஷரத்தை ஜபித்தால், இக்கலியுகத்தில் எல்லாவித 
  தீமைகளையும் அகன்றுவிடும் " மேலும்'

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவர் அருள் மொழி !  

இந்தக் கலியுகத்துக்கு கைகண்ட அருமருந்து ராமநாம ஜெபமே!.
காட்டு வேடன் "ரத்னாகரன்', நாரத முனிவரின் உபதேசம் பெற்று "ராமராம' எனச் சொல்லி,
"வான்மீகி முனிவராக' உயர்ந்தது ராமநாமத்தால்தான்.ஸ்ரீ ஸ்ரீ  ஸ்ரீ மஹா பெரியவர் திரு அருள் மொழி !
பிள்ளைப் பிராயத்தில் கம்பம் கொல்லையைக் காவல் காத்த சிறுவன் கம்பன் ராமபக்தியால் கவிச் சக்ரவர்த்தியாகி

இராம காதை பாடியது ராமநாம மகிமையால்தான்.!
ராம்போலோ' என்ற பாச மனிதனை துளசி தாசராக்கி "ராமசரித மானசம்' பாட வைத்தது ராமநாமமே!
சமர்த்த ராமதாசர் சொற்கேட்ட சாதாரண மன்னன் சத்ரபதி சிவாஜியாக சிறந்து இராமபக்தியுடன்
காவிக்கொடியுடன் மராட்டிய மாநிலத்தை ஆண்டது ராமநாம மந்திர மகிமையே ஆகும்.

இவை மட்டுமா?  இளம் வயதில் "கதாதரன்' என்ற இளைஞன் ராம, கிருஷ்ண மந்திரங்களை இடைவிடாது
மொழிந்து  உலகே வியக்கும்படி "இராமகிருஷ்ண பரமஹம்சராக'த் திகழ்ந்தது ராமநாமத்தால்தான்.!
ல்லாவற்றுக்கும் மேலாக  "மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி' "ரம்பா' என்ற பணிப்பெண் மூலம் ராமநாமம் கற்று
வாழ்நாள் எல்லாம் ராமநாமம் மொழிந்து தேசப் பிதாவாக தெய்வீக புருஷராக சத்யஜோதியாக "மகாத்மா காந்தி'
என்னும் அழியாப் புகழுடன் திகழ்ந்ததும் ராமநாமத்தால்தான்- ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா,  (தினமணி)   

ஸ்ரீ ராம நவமி வைபவம்  ஸ்ரீ ராமர் மட்டுமே அல்லாது, அவர் பரிவாரமே கலந்து அருளும் 
ஒரு தெய்வீ க அருள் காக்ஷி என்றே  கருத வேண்டும் ! சிறியோர் முதல், முதியோர் வரை
ஸ்ரீ ராமரையும், அவர் குணாதிசயங்களையும் அறியாதவர் உண்டோ? பரம ராம பக்தர்
ஸ்ரீ  தியாக ப்ரஹ்ம  ஸ்வாமிகள்,  மனமுருகி ஸ்ரீ ராமனை தன் கண்முன்னே நிறுத்தி பாடிய
பாடல்கள்தான் எத்தனை? அவைகளை நாமும் பாடி மகிழ்கிறோம்..                                                                                                                              
இது அல்லவோ " ராம நாம மகிமை? " மேலும், ஒரு கதை மூலம்.
.ஸ்ரீ ராம நாம மஹிமையைக் கூறுவோம் !         
                           
கதை -  ஒரு சமயம் சக்ரவர்த்தி அக்பர் அவர் முக்கிய மந்த்ரி பிர்பலுடன் காட்டில் வேட்டையாடச் சென்றார் .
அன்று பிர்பல் காலையிலிருந்தே ஸ்ரீ ராம நாமம் தீவிரமாக  ஜபித்துக்கொண்டு இருந்தார். வேட்டையில் ஒன்றும்
கிடைக்கவில்லை. உச்சி வேளை. பசி தாகம்.வாட்டியது.. அக்பர் பிர்பலைப் பார்த்து , உணவு ஏதேனும் 
தேடிக் கொண்டுவரச் சொன்னார்.. ஆனால் பிர்பலோ ஸ்ரீ ராம நாமம் தான் உச்சரித்துக்கோண்டிருந்தார்..
இதைக்க ண்ட அக்பர், இன்று இவரை நம்பினால் உணவு கிட்டாது என்றுணர்த்து,
தானே உணவுத் தேடி வரச் சென்றார்

சற்று தொலைவில் ஒரு வீடு தென்பட்டது. அங்கு சென்று கதவை தட்டினார்.
கதவைத் திறந்தவன் வந்திருப்பது சக்ரவர்த்த்தி  என்றறிந்து, நன்கு உபசரித்து, அவரை  இருத்தி, வந்த கார்யத்தை
வினவினான். அவர், தானும் பிர்பாலும் வேட்டையாட வந்த விபரமும் , பசிக்கு உணவு வேண்டுமென்றும் கூறினார்,
உடனே, வர இருக்கும்  விருந்தினருக்காக வைத்திருந்த உணவை எடுத்துக் கொடுத்தார். சக்ரவர்த்தியும் அதை 
ஆசையாய்  கை நீட்டி வாங்கிக் கொண்டார். நன்றி சொல்லி, விடை பெற்று திரும்பி வந்தார்..                                
அக்பரும் மனம் கேளாமல் பீர்பாலிற்காகவும் உணவைக் கேட்டுப் பெற்று, காட்டில் மரத்தடியில் ராமநாமத்தை
ஜபித்துக் கொண்டிருந்த பிர்பலுக்கு அன்னமிட்டு தானும்  உண்டார். .உண்ட பின் அக்பர் பிர்பளைப் பார்த்து,
ஏளனத்தோடு கேட்டார்." பீர்பால், இப்போதாவது தெரிந்ததா,?

நான் எடுத்த சரியான முடிவால் தான் இன்று உமக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபித்துக்
கொண்டிருக்கிறீர்களே இந்த ராமஜபம், அதுவா உங்கள்  பசியாற்றியது?" ' என. 
அதற்க்கு பிரபல்," அரசே ! மன்னிக்க வேண்டும். தாங்களோ சக்ரவர்த்தி. பசியின்  கொடுமையால், முன்னப்பின்னத்
தெரியாதவன்  வீடு சென்று, பசி என்று சொல்லி,(யாசித்து), அவன் கொடுத்த உணவை கை நீட்டி வாங்கினீர் !
உங்கள் கை, கொடுக்கும் கை, வாங்கும் கை அல்ல. உங்கள் கையால் எனக்கு அன்னமிட்டீர் !.
நானோ , உங்கள் தாசன்! ஸ்ரீ ராம நாமம் சொன்ன எனக்கு, சக்ரவர்த்தி கையால் இட்ட சோறு
கிடைக்க பாக்கியம் என்றால், அது ஸ்ரீ ராம நாம ஜெபத்தின் மகிமை அல்லாது, 
வேறு என்ன? என்று கேட்டதும், அக்பர் திகைத்து நின்றார்! 

மேலும் காஞ்சி மகாபெரியவா கூறினார்- மிக சக்தி வாய்த்த "தாரக" மந்திரங்கள் இரண்டு. ஒன்று "ஓம் ",
இரண்டாவது "ராமா".எல்லா மந்திரதத்துக்கு முன்பு"ஓம்"  சொல்லுவது வழக்கம். ஆனால், தாரக மந்திரமாகிய
 "ராமா"என்று சொல்லு முன்  "ஓம்" சொல்ல வேண்டிய அவசியமில்லை.  மேலும்,"ஓம்" ல் உள்ள "ஆ"கரத்தில்
 விஷ்ணு பகவான் வாசம்."ராமா"விலும் வாசம். அதனால், மூன்று தடவை  ராம நாமம் சொன்னாலே போதும்.
"விஷ்ணு ஸ்ஹஸ்ர நாமம்" சொல்லும் பலன்  கிட்டும் என்கிறார்.
 
இக்கருத்தை அவரே இயற்றிய கவிதையில், "ஐந்தையும் எட்டையும் சேர்க்கும்  நாமம்" என்கிறார்.
("நம: சிவாய" ,"ஓம் நமோ நாராயணாய") .மேலும், அவர் இயற்றிய கவிதையில் அருளிய  
"ராம ராம, ராம ராம , ராம ராம ராம்    
   ராம ராம சீதா  ராம,  ராம ராம ராம் "   என்ற மந்திரத்தை 
எப்பொழுதும் பாராயணம் செய்யலாம்.
 
பக்தர்களே, குடும்பத்துடன் வந்து,
பகவான் ஸ்ரீ  ராமர்  பரிவாரத்தை தரிசனம் செய்து, ராம நாம ஸ்மரணமும் கீர்த்தனமும்  செய்து,
அவர்  அருளைப் பெறத் தவறாதீர்கள்! வாரீர்! 
 
தொகுத்தவர் - ஹரிஹர சுப்பையா