Prana Pratishtapana of Ram Parivar Shrine

அலை மோதுதே, அரிசோனா ஸ்ரீ மஹா கணபதி

ஆலயத்தில், பக்த ஜனங்களின் அலை மோதுதே ! 

 

மே 8,9, 10  தேதிகளில்  நடக்கவிருக்கும், "ஸ்ரீ ராமர் பரிவார"

கும்பாபிஷேக  திரு விழாவில். கலந்து கொண்டு அவன் 

அருள் பெற, வரும் பக்த கோடிகளுக்கு, அன்பு  நிறைந்த 

வரவேற்ப்பு  கார்த்திருக்கின்றது !.

 

ஸ்ரீ ராமர் பரிவாரத்தைப் பற்றி ஒரு சிறு நோட்டம்!

 

 ஸ்ரீ ராமரின் மஹிமை!

 

 " பரித்ராணாய சாதூனாம் , விநாசாய ச துஷ்க்ருதாம் .

தர்ம ஸம்தபனார்தாய . ஸம்பயாமி யுகே, யுகே " என்று

க்ருஷ்ண பகவான் ஸ்ரீபகவத் கீதையில் சொன்னார்".

 

"சாதுக்களை காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும்,

தர்மத்தை நிலை நாட்ட  யுகம்தோறும் அவதரிப்பேன்"

என்று க்ருஷ்ண பகவான் ஸ்ரீபகவத் கீதையில் சொன்னார்".

 

அது போலவே,ராவணன் சிறந்த சிவ பக்தனாக இருந்தாலும், தகாத

 செய்கைகளில் ஈடுபட்டு,சாதுக்களை  கொடுமை படுத்தியதால்

 ராவணை  அழிக்க,தசரத சக்ரவர்த்தியி,மகனாக ஸ்ரீ  ராமர் அவதரித்தார்!  

 

ரமாய, ராம பத்ராய, ராமசந்ராய ,வேதசே,

ரகுநாதாய, நாதாய, சீதைய பதயே நமஹ! என்று அன்புடன் 

விச்வாமித்ரரும், தசரதரும் , அயோத்யா குடி மக்களும் ,

அதுபோல மிதிலையில் குடி மக்களும் , ஸ்ரீ ராமரை அன்புடன்

 அழைத்த பெயர்கள்தான் இவை!

 

தந்தை, கைகேயிக்கு கொடுத்த வாக்கை காப்ற்றவே

 சுய நலன் கருதாது, உடனநடியாய் "பிதிர் வாக்ய  பிரிபாலனம்"  செய்ய 

14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்ற உத்தம பு த்திரன்  இவர் அல்லவோ?

 

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி மகான், அவரே இயற்றிய கவிதையில்.

பொது  மக்கள்  சகல சுகங்களைப் பெற  நித்ய பாராயணமாக   

இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார் !

 

"ராம ராம ராம ராம, ராம ராம ராம்.

ராம ராம சீதா` ராம ராம ராம ராம்."

 ,

ஸ்ரீ சீதா தேவியின் ஸ்வயவரத்திர்க்கு சென்ற ராமன் மிதிலை வீதியில் நடந்துசெல்லும்

 பொழுது, "அண்ணல் அவளைக் கண்டான் , அவளும் கண்டாள்"என்கிரார்  கவி..

 "கண்டதும் காதல். கோண்டதே கோலமோ? "புஜபல பராக்ராம ஸ்ரீ ராமன் வில்லை

 முறித்து சீதையை மணந்தது நாம் அறிவோம்.

 

 ஸ்ரீ சீதா பிராட்டியாரின் மஹிமை !

 

பதிவ்ருதா சிரோண்மணி ஸ்ரீ சீதா பிராட்டியார்,  ஸ்ரீ ராமனுடன் மன்றாடி

தானும் காட்டுக்குச் சென்ற உத்தமி அன்றோ ! "பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை

உண்டானால், எத்தாலும் கூடி வாழலாம்" என்ற குரளை  நிருபித்தனள்  அல்லவோ?

 

ஸ்ரீ ராமரின் ஆருயிர் நண்பன் - வாயு புத்திரன்  ஸ்ரீ ஹனுமான் மஹிமை !

 

உலகம் புகழும் ஸ்ரீ ராம பக்தன் ஆஞ்சநேயன்!,  எவ்வேளையிலும் நினைப்பதும் 

காண்பதும்,, எண்ணுவதும்  ராமனனைத்தான்!  நினைக்க முடியாத அளவுக்கு பல 

 அசாத்ய சாதனைகளை புரிந்தவர்!! அப்படி என்ன செய்தார்?

 

.1. ஸ்ரீ ராமன் சகோதரன் லக்ஷ்மணன், யுத்தத்தில் அஸ்த்திரத்தினால்அடிபட்டு மூர்ச்சித்து

கிடந்த பொழுது, அவர் உயிரை காப்பாற்ற  சஞ்சீவி  மலையையே பெயர்த்து சுமந்து  வந்து 

 லக்ஷ்மணன் உயிரைக் காபாற்றினார் !                                                                                                                                                                                                                                                                       2. ராவணன் ஆண்ட இலங்கையையில் தீயை  வைத்து அழித்தார்!

 

ஒரு கவி இதை அழகாக வர்ணிக்கிறார்.

 

"அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி,

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான். அவன் எம்மை அளித்துக் காப்பான்"

   

இதன் பொருள் -

"அஞ்சிலே ஒன்று பெற்றான்" -பஞ்ச பூதங்களாகிய பூமி,, நீர், அக்னி, வாயு, ஆகாசம் 

 என்பதில், வாயுவின்  புத்திரனாகிய  ஸ்ரீ ஹனுமான்!   "அஞ்சிலே ஒன்றைத் தாவி" -

 விரி கடல் நீரைத்  தாண்டி ,   "அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி - 

, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஸ்ரீ ராமனுக்காக,

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு" ' - ஐந்திலே ஒன்றாகிய பூமி 

 பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு, 

அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் - இலங்கையில், பஞ்ச பூதங்களில்

  ஒன்றாகிய தீயை வைத்தான் ! அவன் எம்மை அளித்துக் காப்பான்". அந்த வீர 

" பஜரங்பலி நம்மைக் காப்பான் " என்பதுதான் இதன் பொருள்!

3.. அதி  பராக்கிரம செயல்! மயங்கி கிடந்த ஸ்ரீ ராம,லக்ஷ்மணரை காப்பாற்றினார் !

     ஸ்ரீ  பஞ்சமுக  பஞ்சமுக ஆஞ்சநேயர் உதயம்!!

 

     ராவணன் தம்பி அதிர்ராவணன், தன் மாயா  சக்திகள் பலவற்றை  உபயோகித்து,

     ஸ்ரீ ராம லக்ஷ்மணர்களை மூர்ச்சிக்க வைத்து, பாதாள லோகத்துக்கு கொண்டு சென்றான்.

    இதை  அறிந்த ஸ்ரீ ஹனுமான், அதிர் ராவணனனைக்  கொன்றால்தான். இவர்களை

    காபாற்ற முடியும் என்பதை உணைந்தார். ஆனால்,அவனைக் கொல்வதும் சுலபம் இல்லை.

    ஏனெனில், அவன் உயிர், பல திசைகளில் உள்ள  ஐந்து தீபங்களில் இருப்பதையும் ,

    அந்த   எரியும் தீபங்க்களை ஒரே சமயத்தில் அணைத்தால்தான் அவன் உயிர் போகும்

    என்பதை உணைந்து, தானே பஞ்சமுக ஆஞ்சநேயராக உரு எடுத்து, அந்த  ஐந்து தீபங்களையும்

    ஒரே  மூச்சில் அணைத்து அதிர் ராவணனை கொன்று, ஸ்ரீ ராம லக்ஷ்மணரை 

     காப்பாற்றியதாக  வரலாறு..

 

    இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ  ராமர் பரிவாரத்தை நினைப்பதும் நன்று,, காண்பதும்,

  , அவர் சரித்திரம் கேட்பதும், நாம ஸ்மரணம் செய்வதும், மிகவும் நன்று! அவர்களுக்கு சேவை

    செய்வது மிக மிகவும் நன்று! கும்பாபிஷேகத்திதில் பங்கெடுத்து சேவை செய்வது போல  வேறு

    கைங்கர்யம் எதுவும் உண்டோ? இதுவே தருணம் வாரீர், சேவை செய்ய, குடும்பத்துடன்!

 

                            தொகுத்தவர் - ஹரிஹர சுப்பையா 

 

Sita Rama Kalyanam- A devotee contributed article

" சீதா கல்யாணம் வைபோகமே"

 

  ஆதித்யன் ஆட்சி  புரியும் அரிசோனாவில்  மஹா சக்தி  வாய்ந்த ஸ்ரீ  மஹா கணபதி ஆலயத்தில்,

  2015, மே 10ம தேதி , பகல் 2 மணிக்கு கல்யாணம் நடக்க இருக்கிறது!   யாருக்கு?

 

ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமா அவதாரத்தில். ஸ்ரீ ராமர்  தன் தர்ம பத்னி 

 ஸ்ரீ மஹா லக்ஷ்மியை, தேவி சீதா  பிராட்டியாராகக் கொண்டு  திருமணம் செய்து கொள்வதே  

 சீதா கல்யாணம்.   " சீதா கல்யாணம் வைபோகமே" 

 

ஸ்ரீ சீதா  கல்யாணம்! அதை நீங்களே  நடத்தி வைக்க தவறாதீர்கள் ! அரிய சந்தர்பத்தை நழுவ விடாதீர்கள்!

ஏன்  என்றால்.. கிழே கண்ட பாட்டையும், விளக்கத்தையும் புரிந்துகொள்ளுங்கள்.,.

                            

                           அரர்க்கு  அன்பு புரிகுவதேன் ?

                           நரரக்கு முறை ஆகுவதேன்?

                           திருப் பணிகள் செய்குவதென்?

                           பெருத்த புண்ணியம் ஈதே !

 

இங்கு ஒரு முக்கியமான  பெரிய ரகஸ்யத்தை . ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவர் சொல்லுகிறார்.

    

அரர்க்கு  அன்பு புரிகுவதேன் ?  விளக்கம்.              

 

'பரோபகாரம் பண்ணி மனஸ் பக்குவமானால்தான் நிஜ பக்தி வரும். ஈஸ்வராநுக்ரஹமும் வரும்.

அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது,

 ப்ராணி வதையைத் தடுப்பது பசு வளர்ப்பது, பசிக்கஷ்டம் யாருக்கும் வராமல் உபசரிப்பது

என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல்,

கார்யத்தில் காட்டினால் பரமேஸ்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்."  

 

மேலும்,, இலவச உபநயனம் செய்வித்தாலோ , ஏழைக/குக்கு திருமணம் செய்வித்தாலோ   அல்லது

 உதவி புரிந்தாலோ , இலவச கல்விக்கு உதவினாலோ , கோவில்கள் கட்டினாலோ அல்லது

நிர்வாகம் செய்தாலோ, கோவில்களில்  பழுது பார்த்து புதிப்பித்தாலோ, இவைகள் மஹா

 புண்ணிய கார்யங்க்கள்.அவர்களுக்கு ஆண்டவன், இம்மையிலும் மறுமையிலும், இக பர சுகம் தந்து,

ஏழு தலைமுறை செழிப்பாக இருக்க உதவுவார்!  

 

மனிதர்களுக்கே  கல்யாணம் நடத்திவைப்பது   ஒரு மஹா  புண்ணிய கார்யமென்றால்,

தெய்வத்தின்  கல்யாணம் செய்து வைப்பது  எவ்வளவு புண்யம்!

 

கல்யாணமான  ஒவ்வொருவரும் தன்  வாழ்க்கையை எப்படி நடத்தவேண்டும் என்பதை ,

உணர்த்துவதுதான்,ஸ்ரீ ராமரின் 14 ஆண்டு கால வனவாசம், ஒரு எடுத்துக் காட்டு!

மேலும், ஸ்ரீ சீதா தேவி கற்ப்பித்த பாடம் - தாம்பத்திய வாழ்க்கையில்,

"பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால், எத்தாலும் கூடி வாழலாம்", என்பதை நிரூபித்தாள்!

 

எவ்வித  கஷ்ட நிலையிலும் , நீதி நெறி தவறாது, அமைதியாவும் ,தீரமாகவும்

இடம், பொருள், ஏவல்க்கேற்ப சமயோஜிதமாய் , நடந்த உத்தமன் ராமன் அல்லவோ?

 மற்றொரு பெரிய குணம்! அவர் தர்ம போர் வீரன்! என்ன ஐயா! போரில், போர் வீரனுக்கு 

 கொல்லுவது அல்லவோ தர்மம்? ஆம். ராம ராவண யுத்தத்தில், ராவணன்

 நிரபராதியாக நின்ற காலத்தில், ஒரே  அம்பினால்  அவனைக் கொன்றிருக்கலாம்.

 கொல்லவில்லை.. "இன்று போய், நாளை வா", என்றார். இவரல்லவோ தர்ம போர் வீரன்? நிற்க .

 

 ஸ்ரீ ராமன் மிதிலை வருகை!-

சீதாவின் ஸ்வயம்வரத்திர்க்கு ஸ்ரீ ராமனும், மற்றும்  பல மன்னர்களும்  வந்திருந்தனர் .

நிபந்தனை - 

 கனமான அந்த பழைய வில்லை யார் முறிக்கிரார்களோ, அவரே சீதையை மணப்பார்.என்று.

 

அவன் ஆழகு - மிதிலை ,மாட வீதியில் ஸ்ரீ ராமன் , அழகே உருவாய், அடக்கமே உருவாய் நடந்து .

சென்றதை  கண்டவர், அவர்  அழகில் லயித்து  நின்றனர்.. இதை கவி கம்பர்  கம்ப ராமாயணத்தில் 

அழகாக சொல்கிரார் !

 

" தோள்கண்டார் தோளே கண்டார்  

தொடுகழல் கமலம் அன்ன  

தாள்கண்டார் தாளே கண்டார்......." எந்த அங்கத்தை கண்டனரோ, அதிலேயே லயித்து,  யாரும்

 ஸ்ரீ ராமனை முழுக்க கண்டதில்லை, என்கிரார் .

 

சீதையும், ஸ்ரீராமனைக் காண  வந்திருந்தாள். இதைக் கம்பன்," அண்ணலும் கண்டார்.அவளும் கண்டாள்"

 என்கிறார். அப் பழைய , பெரிய வில்லை புஜ  பல பராக்ரமம் பொருந்திய ராமன்,  எளிதில்   முறித்து.

ஸ்ரீ  சீதையை விவாஹம் செய்து கொண்டனர் 

 

"சீதா கல்யாணம் வைபோகமே"  

 

 ஸ்ரீ சீதா ராம கல்யாணம் நடத்தி வைத்து மஹா புண்ணியம் தேட,

குடும்பத்துடன் வாருங்கள் ! 

  

தொகுத்தவர்  - ஹரஹர சுப்பையா 

Panguni Uthiram: An explanation by Pt. Anil ji

Panguni maasam is the final month according to the solar calendar. It is also called as Meena maasam. According to Periya Puranam and Bramhanda Puranam, Lord Subrahmanya and Goddess Devayani were married in this month in the Uttara Phalguni star.Brahmotsavams and Kalyana Utsavams are performed in this month all over Tamil Nadu.

In Bala Kanda of the Valmiki Ramayanam, Sage Valmiki states that Lord Rama and Sita were married on the same auspicious day. The Shiva Puranam and Brahmanda Puranam state that Lord Shiva married Goddess Parvati on the same day as well.

Hence this auspicious month is also known as Kalyana Maasam.

Worshipping Lord Subramanya in this month brings Happiness and prosperity to the household.

A special archana to the six faces of Lord Subrahmanya, also known as Shanmukha will be helpd at the temple on April 4th. Please join us to receive the blessings of Lord Subrahmanya.

Panguni Uthiram - A divine day for the worship of Lord Subramanya

A devotee contributed article.

பங்குனி .உத்திரத் திருநாள் !  தெய்வத் திருமணத்  திருநாள்!

 

ஸ்ரீ மஹா கணபதி கோவில், அரிசோனாவில் ஏப்ரில் 3 ம் தேதியன்று  நடக்கவிருக்கும் 

பங்குனி உத்திரத்  திருவிழாவின் கலந்து கொள்ள பக்த கோடிகளே! வாரீர்!

 

 பெருமையைக் காணீர்!!  

 

 பங்குனி மாத உத்திர நஷத்திர பௌர்ணமியில்தான் எம்பெருமான் சிவ பெருமான்.

உலக நாயகி பார்வதி தேவியை மணந்து உமா-மகேஸ்வரராய் திருமணக்கோலக் 

காட்சி தந்ததும் இன்றே!  

 

 "வள்ளிக் கணவன் பேரை, வழிப்போக்கன் சொன்னாலும் 

  உள்ளம் உருகுதடி, கிளியே! ஊனும் உருகுதடி" என்று பாடினான் ஒரு பக்தன் ! 

 

  அந்த வள்ளிக் கண்வன் தேவயானையை  திருபரங்க்குன்றத்தில் இன்று மணந்த 

 திரு நன்னாள்தான், பங்குனி உத்திரம்  !

 

இத் திரு விழாவில் கலந்து கொண்டு , அழகன் முருகனின் திருமணக் கோலத்தை

 கண்டு களித்து,அவன்  அருள் பெற பக்த கோடிகளே!  குடும்பத்துடன்  வாரீர் !

பால் மணக்கும், தேன் மணக்கும், காவடிகள் ஆடும் திருச்செந்தூரில்,
திருமணக் கோலத்துடன்  திரு அருள் புரியும், திரு  முருகன் திருவடிகளை ,

 இங்கும் கொண்டாடுவோம் !

 

மேலும் , அன்புட ன் தொடுத்த ஆண்டாளின் மாலையை ஏற்று அணிந்த ,அரங்கநாதன் 

அவளையே திருமணம் புரிந்து கொண்ட திரு நன்நாளும் இன்று தான்!

 

பார்க் கடலில் உதித்த மகாலஷ்மி,  விஷ்ணு பரந்தாமனை மணந்ததும் இன்றே ! 

 

வால்மீகி ராமாயணத்தில் தேவி சிதா பிராட்டி ஸ்ரீ ராமனை இன்று மணந்ததாக கூறுகிறது.

.

 "சுவாமியே, சரணம் ஐயப்பா!" என்று பக்த கோடிகள், விரதமிருக்கும்
சபரி மாமலை அப்பன் தர்ம சாஸ்தா பிறந்த பங்குனி உத்திர திரு நன்னாளும்  இன்rறே !

பாலும், தெளி தேனும் கலந்தால்ப் போல், இவ்விரண்டு சுவைகளையும்

 ஒருங்கே சுவைத்து அனுபவிக்க வாரீர்!

 

பக்த கோடிகளே! அவன்  அருள் பெற குடும்பத்துடன்  வாரீர் !

 

                                தொகுத்தவர்  - ஹரிஹர சுப்பையா 

Signficance of Rama Navami - A Devotee Perspective

            அரிசோனா ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் நடக்கவிருக்கும் 

                                       ஸ்ரீ ராம நவமி உத்ஸவ வைபவம்,    

                         காத்திருந்த கண்களுக்கு ஒரு கண்கொள்ளக் காட்சி !

                        இன்னல்களைப் போக்க்கி, - சகல சௌபாக்கியங்களை அளிக்கும், 

                                       ராம நாம ஜபம் செய்வோம், வாரீர் !            

நிகழும் March 28, 2015, சனிக்கிழமையன்று அரிசோனா ஸ்ரீ  மகாகணபதி ஆலயத்த்தில் நடக்கவிருக்கும 
ஸ்ரீ ராம நவமி கொண்டாட்த்தில் பங்கு கொள்ள  தவறாதீர்கள்! 

 இம்மையே "ராம' என்ற இரண்டெழுத்தினால்'' -  என்கிறார் கம்பர்
" 2  அக்க்ஷர  த்வாயம் வேதம்  -  "பரம் கீர்த்தனம் கலி நாஷனம்"
 "ராமா " என்ற இரு அக்ஷரத்தை ஜபித்தால், இக்கலியுகத்தில் எல்லாவித 
  தீமைகளையும் அகன்றுவிடும் " மேலும்'

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவர் அருள் மொழி !  

இந்தக் கலியுகத்துக்கு கைகண்ட அருமருந்து ராமநாம ஜெபமே!.
காட்டு வேடன் "ரத்னாகரன்', நாரத முனிவரின் உபதேசம் பெற்று "ராமராம' எனச் சொல்லி,
"வான்மீகி முனிவராக' உயர்ந்தது ராமநாமத்தால்தான்.ஸ்ரீ ஸ்ரீ  ஸ்ரீ மஹா பெரியவர் திரு அருள் மொழி !
பிள்ளைப் பிராயத்தில் கம்பம் கொல்லையைக் காவல் காத்த சிறுவன் கம்பன் ராமபக்தியால் கவிச் சக்ரவர்த்தியாகி

இராம காதை பாடியது ராமநாம மகிமையால்தான்.!
ராம்போலோ' என்ற பாச மனிதனை துளசி தாசராக்கி "ராமசரித மானசம்' பாட வைத்தது ராமநாமமே!
சமர்த்த ராமதாசர் சொற்கேட்ட சாதாரண மன்னன் சத்ரபதி சிவாஜியாக சிறந்து இராமபக்தியுடன்
காவிக்கொடியுடன் மராட்டிய மாநிலத்தை ஆண்டது ராமநாம மந்திர மகிமையே ஆகும்.

இவை மட்டுமா?  இளம் வயதில் "கதாதரன்' என்ற இளைஞன் ராம, கிருஷ்ண மந்திரங்களை இடைவிடாது
மொழிந்து  உலகே வியக்கும்படி "இராமகிருஷ்ண பரமஹம்சராக'த் திகழ்ந்தது ராமநாமத்தால்தான்.!
ல்லாவற்றுக்கும் மேலாக  "மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி' "ரம்பா' என்ற பணிப்பெண் மூலம் ராமநாமம் கற்று
வாழ்நாள் எல்லாம் ராமநாமம் மொழிந்து தேசப் பிதாவாக தெய்வீக புருஷராக சத்யஜோதியாக "மகாத்மா காந்தி'
என்னும் அழியாப் புகழுடன் திகழ்ந்ததும் ராமநாமத்தால்தான்- ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா,  (தினமணி)   

ஸ்ரீ ராம நவமி வைபவம்  ஸ்ரீ ராமர் மட்டுமே அல்லாது, அவர் பரிவாரமே கலந்து அருளும் 
ஒரு தெய்வீ க அருள் காக்ஷி என்றே  கருத வேண்டும் ! சிறியோர் முதல், முதியோர் வரை
ஸ்ரீ ராமரையும், அவர் குணாதிசயங்களையும் அறியாதவர் உண்டோ? பரம ராம பக்தர்
ஸ்ரீ  தியாக ப்ரஹ்ம  ஸ்வாமிகள்,  மனமுருகி ஸ்ரீ ராமனை தன் கண்முன்னே நிறுத்தி பாடிய
பாடல்கள்தான் எத்தனை? அவைகளை நாமும் பாடி மகிழ்கிறோம்..                                                                                                                              
இது அல்லவோ " ராம நாம மகிமை? " மேலும், ஒரு கதை மூலம்.
.ஸ்ரீ ராம நாம மஹிமையைக் கூறுவோம் !         
                           
கதை -  ஒரு சமயம் சக்ரவர்த்தி அக்பர் அவர் முக்கிய மந்த்ரி பிர்பலுடன் காட்டில் வேட்டையாடச் சென்றார் .
அன்று பிர்பல் காலையிலிருந்தே ஸ்ரீ ராம நாமம் தீவிரமாக  ஜபித்துக்கொண்டு இருந்தார். வேட்டையில் ஒன்றும்
கிடைக்கவில்லை. உச்சி வேளை. பசி தாகம்.வாட்டியது.. அக்பர் பிர்பலைப் பார்த்து , உணவு ஏதேனும் 
தேடிக் கொண்டுவரச் சொன்னார்.. ஆனால் பிர்பலோ ஸ்ரீ ராம நாமம் தான் உச்சரித்துக்கோண்டிருந்தார்..
இதைக்க ண்ட அக்பர், இன்று இவரை நம்பினால் உணவு கிட்டாது என்றுணர்த்து,
தானே உணவுத் தேடி வரச் சென்றார்

சற்று தொலைவில் ஒரு வீடு தென்பட்டது. அங்கு சென்று கதவை தட்டினார்.
கதவைத் திறந்தவன் வந்திருப்பது சக்ரவர்த்த்தி  என்றறிந்து, நன்கு உபசரித்து, அவரை  இருத்தி, வந்த கார்யத்தை
வினவினான். அவர், தானும் பிர்பாலும் வேட்டையாட வந்த விபரமும் , பசிக்கு உணவு வேண்டுமென்றும் கூறினார்,
உடனே, வர இருக்கும்  விருந்தினருக்காக வைத்திருந்த உணவை எடுத்துக் கொடுத்தார். சக்ரவர்த்தியும் அதை 
ஆசையாய்  கை நீட்டி வாங்கிக் கொண்டார். நன்றி சொல்லி, விடை பெற்று திரும்பி வந்தார்..                                
அக்பரும் மனம் கேளாமல் பீர்பாலிற்காகவும் உணவைக் கேட்டுப் பெற்று, காட்டில் மரத்தடியில் ராமநாமத்தை
ஜபித்துக் கொண்டிருந்த பிர்பலுக்கு அன்னமிட்டு தானும்  உண்டார். .உண்ட பின் அக்பர் பிர்பளைப் பார்த்து,
ஏளனத்தோடு கேட்டார்." பீர்பால், இப்போதாவது தெரிந்ததா,?

நான் எடுத்த சரியான முடிவால் தான் இன்று உமக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபித்துக்
கொண்டிருக்கிறீர்களே இந்த ராமஜபம், அதுவா உங்கள்  பசியாற்றியது?" ' என. 
அதற்க்கு பிரபல்," அரசே ! மன்னிக்க வேண்டும். தாங்களோ சக்ரவர்த்தி. பசியின்  கொடுமையால், முன்னப்பின்னத்
தெரியாதவன்  வீடு சென்று, பசி என்று சொல்லி,(யாசித்து), அவன் கொடுத்த உணவை கை நீட்டி வாங்கினீர் !
உங்கள் கை, கொடுக்கும் கை, வாங்கும் கை அல்ல. உங்கள் கையால் எனக்கு அன்னமிட்டீர் !.
நானோ , உங்கள் தாசன்! ஸ்ரீ ராம நாமம் சொன்ன எனக்கு, சக்ரவர்த்தி கையால் இட்ட சோறு
கிடைக்க பாக்கியம் என்றால், அது ஸ்ரீ ராம நாம ஜெபத்தின் மகிமை அல்லாது, 
வேறு என்ன? என்று கேட்டதும், அக்பர் திகைத்து நின்றார்! 

மேலும் காஞ்சி மகாபெரியவா கூறினார்- மிக சக்தி வாய்த்த "தாரக" மந்திரங்கள் இரண்டு. ஒன்று "ஓம் ",
இரண்டாவது "ராமா".எல்லா மந்திரதத்துக்கு முன்பு"ஓம்"  சொல்லுவது வழக்கம். ஆனால், தாரக மந்திரமாகிய
 "ராமா"என்று சொல்லு முன்  "ஓம்" சொல்ல வேண்டிய அவசியமில்லை.  மேலும்,"ஓம்" ல் உள்ள "ஆ"கரத்தில்
 விஷ்ணு பகவான் வாசம்."ராமா"விலும் வாசம். அதனால், மூன்று தடவை  ராம நாமம் சொன்னாலே போதும்.
"விஷ்ணு ஸ்ஹஸ்ர நாமம்" சொல்லும் பலன்  கிட்டும் என்கிறார்.
 
இக்கருத்தை அவரே இயற்றிய கவிதையில், "ஐந்தையும் எட்டையும் சேர்க்கும்  நாமம்" என்கிறார்.
("நம: சிவாய" ,"ஓம் நமோ நாராயணாய") .மேலும், அவர் இயற்றிய கவிதையில் அருளிய  
"ராம ராம, ராம ராம , ராம ராம ராம்    
   ராம ராம சீதா  ராம,  ராம ராம ராம் "   என்ற மந்திரத்தை 
எப்பொழுதும் பாராயணம் செய்யலாம்.
 
பக்தர்களே, குடும்பத்துடன் வந்து,
பகவான் ஸ்ரீ  ராமர்  பரிவாரத்தை தரிசனம் செய்து, ராம நாம ஸ்மரணமும் கீர்த்தனமும்  செய்து,
அவர்  அருளைப் பெறத் தவறாதீர்கள்! வாரீர்! 
 
தொகுத்தவர் - ஹரிஹர சுப்பையா  

  

Ugadhi Significance By Pt Anilji

పాఠకులందరికీ  శ్రీ  మన్మథ  నామ సంవత్సర  శుభాకాంక్షలుమన  పూర్వీకులైన ఋషులచే కాలగణనం  లో   చూపిన చాంద్రమాన  విధానము యందు చైత్ర శుద్ధ ప్రతిపది యుగాది (ఉగాదిపండుగ  జరుపుకొనుట సాంప్రదాయము.

 March 21 st ,2015    శ్రీ  మన్మథ  నామ సంవత్సర   యుగాది (ఉగాది ) పండుగ  జరుపుకోదగినది .యుగాది పండుగ నాడు ప్రాతఃకాలము నందు తైలాభ్యంగన స్నానము  ఆచరింప వలెను .వేప పువ్వు , చింతపండు , మొదలగు ఆరు రుచులతొ  కూడిన ఉగాది పచ్చడి    భగవత్పూజ ఆచరించి, నివేదన చేసి తినవలెను .పిమ్మట నూతన సంవత్సర పంచాంగ శ్రవణం  చేసి పరమాత్ముని   చే నియమింపబడిన కాలస్వరూపమున,   సంవత్సరమున   జరుగు విశేషములను , రాజాది నిర్ణయమును ,కందాయ ఫలములను, ఆదరముగా తెలుసుకొనవలెను . ఉగాది పండుగ నాడు ద్విజులకు ఉదకకుంభమును  (నీటిచెంబును  ) దానము  చేయుట సనాతన  సాంప్రదాయము  నందు  భాగము .  

 

||శ్లో|| ఏష ధర్మ ఘటో   దత్తో బ్రహ్మ విష్ణు శివాత్మకః       |

         అస్య ప్రధానాత్సకలాః  మమ సంతు మనోరథాః       ||

పైన శ్లోకమును పఠించి ఉదకకుంభ దానమాచరించిన , సకల మనోభీష్టములు   నెరవేరును .ఇట్లు  ఆచరించిన  వారు  సంవత్సరమంతయూ సుఖశాంతులతో  జయప్రదము  గా  నుండెదరని  నారదాది  మునీంద్రులచే చెప్పబదినది .

 

ఉగాది పండుగ నాడు  పాలు ,పెరుగు, నెయ్యి  తినుట  మాని నిష్టగా  గౌరీ వ్రతము  ఆచరించుట సాంప్రదాయము గా ఉన్నది. ఉగాది  నాటి నుండి  వసంత నవరాత్రులు ప్రారంభమగును .శ్రీరామనవమి నాటికి   నవరాత్రులు పూర్తియగునుచాంద్రమాన నూతన సంవత్సరాదిన  (ఉగాది రోజున) ఇట్లు ఎవరైతే  ఆచార నియమములు పాటించెదరో   ,అట్టి వారు  సంవత్సరమంతయూ  సకల భోగభాగ్యములు  కలిగి, సుఖ శాంతులతో  వర్ధిల్లెదరని నారద సంహిత   యందు మునీంద్రుల మతము .    

 

నూతన సంవత్సర శుభాకాంక్షల తో ,

                               శుభాస్తే పంథానస్సంతు

Thai Poosam- A Devotee Contributed Article

"தை பூசம்" மஹிமை !

 

  சக்தி மிகு  ஸ்ரீ மஹா கணபதி கோவில், அரிசோனாவில் !  

 

       வேலுண்டு, வினை இல்லை   !

       மயில் உண்டு, பயம் இல்லை  !

                                    குகன் உண்டு, குறை இல்லை  !         ஒரு  பக்தன் 

 

தாரகாசுரனை  அழிக்க. பார்வதி அன்னை பராசக்தி ,

மகன் அழகன் முருகனுக்கு,  "சக்தி வேல்"அளித்த 

"தை பூச", தினத்து  கொண்டாட்டமாம்!, கொண்டாட்டம் !

அச்சக்தி வேலையும் முருகனையும் காண

பக்த கோடிகளே ! திரண்டு வாருங்கள்! 

திருத்தணியோ, திருப்பரங்குன்றமோ ஏற வேண்டாம்!

அத்திருக் கல்யாண கோலத்தை  அரிசோனாவிலேயே காணலாம்! 

திருச்சரவணப்  பொய்கைக் காணவும் போகவேண்டாம்! 

க்ஷடாக்ஷரத்தின் மகிமையை இங்கும் அறியலாம்!!

 

" ஓம் சரவண பவ " என்ற திருமந்திரத்தை  ஒரு முறை சொன்னாலே

போதுமாம்!கோடி தீர்த்தங்களில் செய்த ஸ்நானத்தின்  புண்யமாம்!

 க்ஷடாக்ஷரத்துள்   எல்லா மந்திரங்களும் அடக்கமாம்!

வாருங்கள் ! நம் குடும்ப நலனுக்காக ஒன்று சேர்ந்து, 

  " ஓம் சரவண பவ " என்று பல முறை கூறுவோம் !

 

குறை தீர்ந்தவர்கள்,  பால் குடமோ,வண்ணக் காவடியோ எடுத்தாடலாம்!

குறை உள்ளவர்களும் குறை தீர, கூடவே சேர்ந்து  எடுக்கலாம்!  

 

தீராத வினைகளை தீர்த்து வைக்கும் எம் அப்பனே ! முருகா !

 ஆறு படைவீடு அரசா ! மூவுலகெங்கும் புகழும் சங்கரன் புதல்வா!

பரமேஸ்வரனுக்கு ப்ரணவத்தின் பொருளை  ஓதிய ஸ்வாமிநாதா !

அவ்வை மா ஞானிக்கு சுட்ட பழத்தின் தத்துவத்ததை  உணர்த்திய பாலா !

எமக்கும் ஞானத்தை அருளுவாயப்பா! முருகா!

அடைக்கலம் அடைந்தோம் அய்யனே! உன்  திருவடி சரணம்!

 

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பர். உள்ளம் உருக, ஞான

 குருவை துதித்து,  ஆடிப் பாடினால் ஞானமும் பிறக்கும் !

எல்லாவித பாக்கியங்களும் கிட்டும் !

 

முருகா, அழகா, வெற்றிவேல் முருகா!

வேகமாய் வந்தமை  காத்தருள் கந்தா!

 

துதிப்போம், குடும்பத்துடன் வாரீர் வாரீர்!. 

சக்தி மிகு  ஸ்ரீ மஹா கணபதி கோவில், அரிசோனாவில் ! 

 

 

தொகுத்தவர் ஹரிஹர சுப்பையா 

Maha Sivaratri- A Devotee Contributed Article

ஓம் நமஹ: சிவாய  !

ம்ருத்துன்ஞ்ஜயாய ருத்ராய,

நீலகண்டாய ஷம்பவே

அம்ருத்தேஷாய ஸர்வாய

மகாதேவாய தே நமஹ: !

 

" சம்போ மகாதேவா, ஹர ஹர சம்போ மகாதேவா ! " என்று பக்த

கோடிகள் கரகோஷம்! பல திரிகளைக் கொண்ட தீபத்தின்  ஒளியில்

'அதி சுந்தரமான ‘ எம் பெருமானின் திவ்ய தரிசனத்தைக் கண்டு

    களித்த  கரகோஷம்!

 

ஸ்ரீ மகா கணபதி கோவில  அரிசோனாவில், மகா சிவராத்ரி  அனுபவம்

மறக்க முடியாதது !

ஸ்ரீ மகா கணபதி கோவில் , அரிசோனாவில்  பிப்ரவரி 16ம் தேதியன்று,

"மஹா சிவராத்திரி" வைபவம்  மிக விமரிசைய்டாக நடக்க இருக்கிறது.

தாங்கள், குடும்பத்துடன் வந்து, எம்பெருமான். பாதி மதி வேணியனை,

கருணா மூர்த்தியை தரிசித்து, எல்லாவிதபாக்கியங்களையும்  பெற்று

இவ்வுலகிலும், மறு உலகிலிலும் சுகங்களை அனுபவிக்க,அவன்

அருளைபெற வேண்டாமா ? இது அல்லவோ தருணம் !

 

கீழ்கண்ட ப்ரபல  சிவ ஸ்தலங்களில்

மகா சிவராத்திரி விமரிசையாக கொண்டாவது போல் , ம்

அரிசோனா ஸ்தலத்திலும்  மிகப் பிரமாதமாக கொண்டாடுவோம்!

 

1. குஜராத்தின் சௌராஷ்ட்ரப் பகுதியில் சோமநாதர்

2. ஆந்திரபிரதேசத்தின் ச்ரிசைலம் மல்லிகார்ஜுனர்

3. மத்தியபிரதேசத்தின் உஜ்ஜயினி மஹாகாலர்

4. மஹாராஷ்ட்ரத்தின் பரலி வைத்யநாதர்.

5. மஹாராஷ்ட்ரத்தின் டாகினி பீமசங்கரர்

6. மஹாராஷ்ட்ரத்தின் தாருகாவனம் நாகேசர்

7.. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம்/சேது பந்தனம் இராமேசர்

8. உத்தரபிரதேசத்தின் காசி/வாரணாசி விஸ்வேசர்

9. மஹாராஷ்ட்ர கௌதமீ கரையில் நாசிக் திரயம்பகேசர்

10. உத்தராஞ்சலின் இமயமலையில் கேதார்நாத் கேதாரேஸ்வர்

11. மஹாராஷ்ட்ரத்தின் சிவாலயமாம் தேவசரோவர் குஸ்மேசர்

12.. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம்/சேது பந்தனம் இராமேசர்

13. மத்தியபிரதேசசிவபுரி/அமலேச்வரம் ஓம்காரேஸ்வரர்

 

சிவ பெருமான் கண்ணப்பனுக்கு ஏன் அருளினார்? எச்சிலை துப்பினதனல்தானா?

இல்லை, செருப்புக்காலால் கண்ணில் வந்த இரத்தத்தை அழுத்தி

 மிதிததாலானா? பக்திகள்  பல விதம். அதிலே இதுவும்  ஒரு விதம்!

அறிந்தும் அறியாமலும் செய்த பக்தி!

இதே மாதிரிதான் சிவராத்ரி இரவில் நடந்த ஒரு வேடனின் சம்பவமும்!

 

கொடும் மிருகங்கள் உலவும் ஒரு காட்டில், வாரணாசியில் பிறந்த ஒரு

வேடன் தன் குடும்பத்துடன் வசித்து வந்தான், ஒரு நாள் பசியால் வாடும் தன் குடும்பினத்தினருக்கு வேட்டையாடி உணவு  கொண்டுவரச் சென்றான்.

வெகு நேரம் வேட்டையாடியும், ஒன்றும் கிடைக்கவில்லை. களைத்து

பசியுடன் இருந்த அந்திப் பொழுதில் ஒரு மான் தென்பட்டது

உடனேயே அதனைக்  கொன்று,கால்களை கட்டி தூக்கிச் சென்றான்.

இருட்டிவிட்டது. வீட்டுக்குப்  போக யத்தனித்தால்  கொடிய  மிருகங்கள்

 கட்டாயம் தாக்கும். போக முடியாது . என்ன செய்வது? அருக்கிலிருந்த

 ( பில்வ) மரத்தின்  மீது ஏறி, ஒரு கிளையில் படுத்துக்கொண்டான்.

பசி, களைப்பு, கவலையால்  வாடினான் . தூக்கம் தாங்கவில்லை.

 தூக்கத்தில் கீழே விழுந்தால், மிருகங்கள்  பாய்ந்து கொன்றுவிடும்.

 அதனால், விழித்துக்கொண்டிருப்பதர்க்காக, அம்மரத்து இலைகளை

ஒன்று ஒன்றாக இரவு முழுதும் கீழே போட்டான். (அர்ச்சனை) குடும்பினத்தினர்

 பசியால் தவிக்கின்றனரே என்று இரவு முழுதும் கண்ணீர் விட்டான்.

அதுவும் கீழே இருந்த .சிவலிங்கத்தின் மீது விழுந்தது.(அபிஷேகம்)  

இரவில்  போட்ட அந்த எல்லா பில்வ இலைகளும் கீழே இருந்த 

சிவலிங்கத்தின் மீது விழுந்தது. காலையில் அதைப் பார்த்தான்.

அதுதான் அவன் கண்ட ஜோதிரூப சிவ லிங்க மூர்த்தி ! முக்தி ! 

அவ்வேடனுக்கு அளித்தார் எம் பெருமான் முக்தி!

அறிந்தும் அறியாமலும்,தெரிந்தும், தெரியாமலும்  செய்த பக்தி!

,.

இக்கதையின் ஆன்மீக அர்த்தத்தை ஸ்வாமி சிவானந்த ஸ்வாமிகள்

மிக அழகாக வர்ணிக்கிறார்.

காடு - விழிப்பு, ஸ்வப்பனம் , நித்திரை, துரியாஎன்ற நான்கு நிலைகளைக் கொண்ட மனம் -

கொடிய மிருகங்கள் - காமம், குரோதம், வெறுப்பு,கோபம், பொறாமை,

பேராசை  என்ற கட்டுக்கு அடங்காது  அலையும் கொடிய மிருகங்கள் -

வேடன் - ஒரு யோகி -  கொடிய மிருகங்கள், கொல்லப்படவேண்டும் –

ஆஞ்யா  சக்கரத்தில், யோகி தன் த்யானத்தை நிறுத்தி அவைகளை அடக்க  முயல்கிறான்.

பில்வ மரம்தான் -  முதுகு எலும்பு.

பில்வ மரம் அடிதான் -  மூலாதாரம்,

ஏறி கிளையில் படுத்தான்.- மூலாதாரத்திலிருந்து "குண்டலனி சக்தி"

முதுகேலும்புனுள்  இருக்கும் மூன்று நாடிகளின் நடுவில் இருக்கும்

சூஷ்ம நாடி வழியாக "ஆக்ஞ்யா" சக்ரத்தை அடைகிறது.

பில்வ இலைகள்தான் - 3 நாடிகள் -  இட, சூஷ்ம, பிங்கள நாடிகள் !

                        உறக்கம் வராமலிருப்பதற்க்காக போட்ட பில்வ இலைகள்தான் "அர்ச்சனை"

           குடும்பித்தினர்  பசியால் வாடுகிறார்களே என்று அழுத கண்ணீர்தான் "அபிஷேகம் "

                         அதிகாலையில் கண் முழித்து கீழே பார்த்தான். பில்வத்துடன்  சிவ லிங்கம்

        .                      ஜோதியாய் காட்சி அளித்ததுதான் முக்தி ! எம்பெருமான் அளித்தார் முக்தி !

 

 

ஒரு சமயம்., அன்னை  பராசக்தி பார்வதி தேவி, சிவ பெருமானிடம்

 " ஸ்வாமீ ! மக்கள் உம்மை பலவிதமாக பூஜிக்கின்றனர். அவைகளுள் உமக்கு பிடித்த பூஜை எது?" என்று வினவினாள் . அதற்க்கு, அவர் ":தேவி, சிவராத்ரியில்  நாள் முழு தும் பட்டினி இருந்து, இரவு நான்கு  ஜாமங்களில், முதல் ஜாமம்  நீராலும், இரண்டாவது ஜாமம் பாலினாலும்., மூன்றாம் ஜாமம் தயிரினாலும், நான்காம் ஜாமம் , நெய் இவைகளால் அபிஷேகித்து, காலையில்  பிராமருக்கு  போஜனம் செய்வித்த பிறகு , தான்  உண்டால்,

அதுவே எனக்கு மிகவும் பிடித்தது" என்றார்.

சிலர் தீவிரமாக சுத்தப் பட்டினியாக இருந்து கடைப் பிடிக்கிரார்கள். பலர்.நாள் பூராவும் 

"ஓம் நமஹ: சிவாய" என்று ஜபித்துக்  கொண்டே  இருப்பார்கள். 

எதுவும் முடியாதவர்கள்  " சிவனே"  என்று அபிஷேக அர்ச்சனைகளை பார்த்தாலே போதும். கிடைக்கும்  முக்தி !

வாருங்கள்.! சந்தர்பத்தை கை விடாதீர்கள்! உங்கள் வரவை

 எதிர்கொண்டு அழைக்க காத்திருக்கின்றனர் !

வருக! குடும்பத்துடன் வருக !

 

தொகுத்தவர் - ஹரிஹர சுப்பையா